தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்சார ரயில்: தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் – தமிழிசை

தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்சார ரயில்: தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் – தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதில், # விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை # பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிசந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு # தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை # தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை # மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் # தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை…

Read More

ஜாலியன் வாலாபாக் படுகொலை; 100 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

ஜாலியன் வாலாபாக் படுகொலை; 100 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நாடு முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ந்தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் நகரில் இந்தியர்கள் பலர் ஒன்றாக கூடி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு வந்த இங்கிலாந்து நாட்டு ஜெனரலான ரெஜினால்டு டயர் தனது குழுவினரை அவர்களை நோக்கி சுடும்படி உத்தரவிட்டான். அங்கு கூடியிருந்தவர்கள் தப்பி செல்ல இருந்த குறுகலான ஒரே வழியும் அடைக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டத்தினர் வேறு எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1,100க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர். சிலர் தங்களை காத்து கொள்ள அங்கிருந்த…

Read More

ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது

ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது

ஊழல் செய்வதற்காகவே காங்., ஆட்சிக்கு வர துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம் ஜூனாகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகளை சிறை வாசல் வரை அனுப்பி உள்ளோம். இன்னும் 5 ஆண்டுகள் நீங்கள் எனக்கு கொடுத்தால் அவர்களை சிறைக்கு உள்ளாகவே அனுப்புவோம். காங்.,க்கு தெரியும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த மேலும் பலரின் பெயர்கள் வெளியே வரும் என்று. பெயர் மட்டுமல்ல, அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. தேர்தலில் ஊழல் செய்து, ஏழைகளுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என காங்.,…

Read More