இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்

இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம்; “யுத்த காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்கப்படும் என்பதில், அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போது; “முஸ்லிம் தலைவர்கள்…

Read More

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் முகமது நபி , சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து ஐதராபாத் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Read More

48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

48 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்கு இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது.இந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் – 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி. இந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும். இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும். அமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில்,…

Read More