இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இலங்கை முழுவதிலும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தியிருந்தனர். கடந்த 22 வருடங்களாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 1994ஆம் ஆண்டு காலப் பகுதி வரை, தாம் சிறந்த முறையில் சம்பளத்தை பெற்ற போதிலும், 1994ஆம் ஆண்டு பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாரிய சம்பள முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும்…

Read More

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1990 -ன் பிற்பகுதிகளில், 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக  தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற நிலையில்,  கர்டினல் பெல் மீதான  குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதை அடுத்து, கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான கார்டினல் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகே பரோல்…

Read More

30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

பா.ஜ., எம்.பி.,க்களில் 30 சதவீதம் பேரை புறக்கணிக்க கட்சி எண்ணி உள்ளது. சீட் மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்குமே தவிர, குறையாது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ‛‛நான் மத்திய அமைச்சர், நான் மூத்த தலைவர்” என்றெல்லாம் கூறிக்கொண்டு யாரும் இனி சீட் கேட்க முடியாதாம். யாராக இருந்தாலும் வெற்றி பெற மாட்டார் என கருதப்படும் நபருக்கு நிச்சயமாக மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காதாம்.2014 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 282 எம்.பி.,க்கள் கிடைத்தனர். இவர்களில் 160 பேர், மோடி அலையை பயன்படுத்தி முதன்முறையாக எம்.பி., ஆனவர்கள். இந்த 160 பேரில் பலருக்கு அவரவர் தொகுதியில் சரியாக செயல்படவில்லை. பா.ஜ., சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.மோடி…

Read More