இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

கொழும்பின் புறநகர் பகுதியான மொறட்டுவை பகுதியிலிருந்து சுமார் 1800 மில்லியன் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய சமயத்தில் இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோகிராமிற்கும் அதிக எடையை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், குறித்த வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 3000கும் அதிகமான துப்பாக்கி ரவைகளும், கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 4ஆம் திகதி கைது…

Read More

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

இளைஞர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ள செல்பி மோகம் அவர்களுடைய உயிருக்கே பல நேரங்களில் உலை வைக்கிறது. இது தெரிந்தும் செல்பியால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் ஒருவர் கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்று கையில் காயத்தை வாங்கியுள்ளார்.  அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ படம் எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பையும் தாண்டி கூண்டு அருகே சென்றார். பின்னர் அவர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் ‘செல்பி’ படம்…

Read More

காஷ்மீருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?

காஷ்மீருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?

 லோக்சபா தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களுக்கு மட்டும் சட்டசபை தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பரூக் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், லோக்சபா தேர்தலுக்கு சேர்த்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கிறோம். லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள போது, காஷ்மீரில் மாநில தேர்தலை நடத்த மட்டும் ஏற்ற சூழ்நிலை இல்லையா? உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால். போதிய அளவில் பாதுகாப்பு படைகள் உள்ளன. அப்படி இருந்தும் காஷ்மீரில்…

Read More