அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Read More

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்றைய பேச்சில் இவ்விரு கட்சிகளுக்கு இடையே முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவொரு முடிவும் ஏற்படவில்லை. வைகோவும் அவர்களின் கட்சி நிர்வாகிகளும் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சு நடத்துவார்கள் என கூறப்பட்டது. ஆனால் முக்கிய பேச்சு எதுவும் நடக்கவில்லை.இன்றைய பேச்சில் விடுதலைசிறுத்தை , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்தன. மதிமுக தரப்பில் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படுவதால் திமுக தர்மச்சங்கடத்தில் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் காலையில் இருகட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஆகி விட்டதாகவும், மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் சில நிமிடங்களில் மதிமுக…

Read More

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மக்கள் திரளாக பங்கேற்று விடிய, விடிய கொண்டாடினர். ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, இன்று (4 ம் தேதி ) மாலை, 6:00 மணிக்கு துவங்கியது; காலை, 6:00 மணி வரை நடக்கிறது. விழாவில் ஜனாதிபரதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல் நிகழ்வாக லிங்க பைரவி கோவிலில், தீபாராதனை நடந்த பின், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த, 40 ராணுவ வீரர்களின் நினைவாக, ஜனாதிபதி மற்றும் சத்குரு இருவரும் இணைந்து ஈஷா…

Read More