சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம்

சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம்

சவுந்தர்யாவை மணக்கும் விசாகன், வர்த்தகம் தொடர்பான மாஸ்டர் டிகிரியை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர். ரஜினிகாந்தின் அரசியல் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது அவரது இளைய மகள் சவுந்தர்யா திருமணம் குறித்து விசாரித்தபடி இருக்கிறார்கள். சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே திட்டமிட்டு, காதும் காதும் வைத்த மாதிரி இந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அதனால் விழா தொடர்பான படங்கள் வெளியே வந்த பிறகுதான் இந்த நிகழ்ச்சி…

Read More

வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின்…

Read More

டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

சமீபத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, இன்று (பிப்.,11) முறைப்படி டுவிட்டரிலும் இணைந்துள்ளார். உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பிரியங்கா, லக்னோவில் இன்று முதல் முறையாக பிரசாரத்தை துவக்கினார். சகோதரரும், காங்., தலைவருமான ராகுலுடன் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரியங்கா பிரசாரம் செய்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தை துவக்கி அதே சமயத்தில், அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பிரியங்கா துவக்கி உள்ளார். பிரியங்கா டுவிட்டரில் இணைந்துள்ளதாக காங்., கட்சியின் மைக்ரோ பிளாக் பக்கத்தில் காலை 11.49 மணியளவில் தகவல் பதிவிடப்பட்டது….

Read More