அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம் ;(சிறுகதை) – முனைவர் ஆ.சந்திரன்

அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம்  ;(சிறுகதை)    –    முனைவர் ஆ.சந்திரன்

அண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் வலிய முயற்சித்து வரவைத்த சிரிப்புடன் சங்கீதா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். இல்லை! கேட்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தான். கல்லூரி காலத்தின்அழகிய காட்சிகள் அவன் வெற்றுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. அதைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் சங்கீதா அகஸ்டியாவைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்திருந்தாள். “சரிண்ணே! அகஸ்டியாவைப் பத்திரமாய்ப் பாத்துக்குங்க” என்று கூறிவிட்டு, அவளை உடன் அழைத்துக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள். “வர்ரேன் சார்” என்று கையாட்டிச் சென்றாள் அகஸ்டியா, சங்கீதாவின் பின்னால் துள்ளி குதித்து வேகமாக! அவளது பார்வை மறையும் வரை அப்படியே நின்ற கதிரவனுக்குத் தன்நெஞ்சில்…

Read More

நான் கல்வி கற்று எந்தப்பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாகயும் நியாமாகவும்மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சிய வெறி

நான் கல்வி கற்று  எந்தப்பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாகயும் நியாமாகவும்மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சிய வெறி

சகாயம் ஐஏஎஸ் கூறுகின்றார் “கிராமத்துப் பின்னணிதான் என்னுடைய இளமைக்காலம். இளமைக் காலம் நான் தமிழ் மீது தீராத காதல் கொண்டிருந்த காலம். அதைப்போல நான் கல்வி கற்று எந்தப்பதவிக்கு நான் சென்றாலும் நேர்மையாக நியாமாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சிய வெறி. இப்படியாக என்னுடைய இளமைக்கால பின்னணி அமைந்தது என்று நான் இன்னும் பெருமைப்;பட்டுக் கொள்வேன்” இவ்வாறு கூறுகின்றார் தமிழ்நாட்டின் மதுரை பிராந்திய முன்னாள் ஆட்சியராக விளங்கியவரும் நேர்மையான அரசுப் பணியாளரும், தமிழ் மீது பற்றுக் கொண்டவருமான சகாயம் ஐஏஎஸ் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “சிறகு” சஞ்சிகைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரம் வழங்கிய பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படிப் பேட்டியின் முழு வடிவமும்…

Read More

தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய இரண்டு தாயகங்களையாவது உலகத் தமிழர்கள் காப்பாற்றியே ஆகவேண்டும்

தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய  இரண்டு தாயகங்களையாவது உலகத் தமிழர்கள்  காப்பாற்றியே ஆகவேண்டும்

கவிஞர் காசி ஆனந்தன் கூறுகின்றார்   “தமிழர்கள் தங்களுக்கு உலகில் இன்னமும் இவ்வளவு பெரிய கடந்த கால பேரழிவிற்குப் பின்பும் இரண்டு தாயகங்கள் இன்னும் தங்கள் கைகளில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு, தமிழீழம் என்ற அந்த இரண்டு தாயகங்களையாவது தாங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு செயல்படவேண்டும் என்று நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.” மேற் கண்டவாறு கூறுகின்றார் கவிஞர் காசி ஆனந்தன். எமது போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையுடனும் கைகளில் எழுதுகோலுடனும் ஒரு காலத்தில் உணர்வோடு பவனி வந்த “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன், தற்போது தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். இறுதிக் காலத்தில் வன்னிக்கு வருமாறு தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்திருந்தும், கவிஞருக்கு…

Read More

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது

நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.வேணுகோபால் அவர்களின் நேர்காணல் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது. சிறிய வயதில் பாரதியார் சொன்னதுபோல் ‘ஓடிவிளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ இதுதான் தடுப்பு. இவ்வாறு கூறுகின்றார் நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.வேணுகோபால் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “சிறகு” மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி பேட்டியின் முழு வடிவம் இதோ!! கேள்வி: டாக்டர் உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர் என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில்…

Read More

காந்தியடிகள் பெருங்குற்றவாளிபோல அடைக்கப்பெற்றாலும் புத்தகங்களுடனும் புனித சிந்தனைகளுடனும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்

காந்தியடிகள் பெருங்குற்றவாளிபோல அடைக்கப்பெற்றாலும் புத்தகங்களுடனும் புனித சிந்தனைகளுடனும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்

இந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி அனைத்தையும் இழந்துள்ளனர். தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது அல்ல இந்திய சுதந்திரம். செந்நீர் ஊற்றி கண்ணீரால் காத்துப் பெற்றது சுதந்திரம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை பேர் இன்னுயிர் இழந்தனர். சிறைபட்டனர். எண்ணிக்கை எண்ணி முடியாது. வரலாறு சொல்லி முடியாது. அண்ணல் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அக்காலத்தில் ஆண்ட ஆங்கில அரசிற்கு எதிராக, பத்திரிக்கைகளில் காந்தியடிகள் எழுதி மக்கள் அமைதியைக் குலைக்கிறார் என்பது அரசு தரப்புக் குற்றச்சாட்டு. இதனைக் காந்தி எதிர்கொள்கிறார். வழக்கறிஞராக, பாரிஸ்டராக தென்ஆப்பிரிக்காவில் கடமையாற்றிய அண்ணல் காந்தியடிகள்…

Read More