இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்… : கமலுக்கு எச்.ராஜா பதிலடி

இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்… : கமலுக்கு எச்.ராஜா பதிலடி

கொல்கத்தா காவல்துறை ஆணையரைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியது பற்றி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் கருத்தைத் தெரிவித்ததற்கு தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். கமல்ஹாசன் கூறும்போது, “மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சுயமரியாதை உள்ள எந்த அரசும் இது போன்ற அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளாது” என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம். நம்புவோம். சுயமரியாதைக்கும் தேசவிரோதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்” என்று சாடியுள்ளார்.

Read More

பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் -ராகுல்காந்தி

பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் -ராகுல்காந்தி

மேற்கு ஒடிசாவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:- ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறோம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மக்கள் பலனடைந்தனர். ஆனால் அதைக் காட்டிலும் பெரிய நன்மை குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தின் மூலம் கிடைக்கும். 5 முதல் 6 மாதங்களுக்கு அனைத்து ஏழைகளுக்கும் இந்த வருமானம் கிடைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. பிரதமர் மோடி, ஒரு விவசாயி குடும்பத்துக்கு 17 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்கும். இப்பணம் தனிப்பட்ட…

Read More

உலகம் செய்தி பழிவாங்கும் அரசியலை ஒதுக்குவோம் : டிரம்ப்

உலகம் செய்தி  பழிவாங்கும் அரசியலை ஒதுக்குவோம் : டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்க கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பழிவாங்கும் அரசியலை ஒதுக்க வேண்டும் என எம்.பி.,க்களிடம் கேட்டுக் கொண்டார். தலைநகர் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க கூட்டுக் குழு கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர், பழிவாங்குவது, எதிர்ப்பது, தண்டனை வழங்குவது போன்ற அரசியலை தவிர்த்து ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் பொதுநலன் அடிப்படையிலான அரசியலே சாத்தியப்படக் கூடியது. சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியன அமெரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது. கடந்த காலங்களில், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள்…

Read More