யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் பார்க்கும் ஒப்புகைச் சீட்டு: நாடாளுமன்ற தேர்தலில் 100% அமல்: தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் பார்க்கும் ஒப்புகைச் சீட்டு: நாடாளுமன்ற தேர்தலில் 100% அமல்: தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

2019- நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை 100% அமைக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க உத்தரவிடக்கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியராஜ் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். தவறவிடாதீர் நான் யார் தெரியுமா? சிபிஐ, இண்டர்போல், வருமான வரித்துறை, பிரதமர் பாதுகாப்பு அதிகாரி: போலீஸாரை தலைச் சுற்றவைத்த நபர் கைது அவரது மனுவில், “மின்னணு ஓட்டுப்பதிவு…

Read More

யோகி ஆதித்யநாத் விவகாரம்: மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? மம்தா கேள்வி

யோகி ஆதித்யநாத் விவகாரம்: மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? மம்தா கேள்வி

மேற்கு வங்காளத்தில் பேரணிக்கு சென்ற அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர்கள் இறங்க கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்கிறது. தேர்தல் ஆணையத்திடமும் பா.ஜனதா புகார் அளித்துள்ளது. இப்போது இவ்விவகாரத்தில் பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? என கேள்வியை எழுப்பியுள்ளார். மராட்டியம் மற்றும் பீகார் சென்ற போது அரசு மாளிகையில் தங்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார். மராட்டியத்தில் பா.ஜனதா அரசும், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி அரசும் நடக்கிறது. எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற பா.ஜனதா தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி பதிலடியை கொடுத்துள்ளார்.

Read More

உலகம் செய்தி பின்னாடி தோனி இருந்தால்… வீரர்களுக்கு ஐ.சி.சி., எச்சரிக்கை

உலகம் செய்தி  பின்னாடி தோனி இருந்தால்… வீரர்களுக்கு ஐ.சி.சி., எச்சரிக்கை

துபாய்: இந்திய அணியின் ‘சீனியர்’ விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டன் தோனி, 37. சிறந்த ‘பினிஷர்’ என்று பெயர் பெற்றவர். தவிர விக்கெட் கீப்பிங் பணியிலும் கலக்கி வருகிறார். மின்னல் வேகத்தில், கண் சிமிட்டும் நேரத்துக்குள் ‘ஸ்டம்பிங்’ செய்வதில் வல்லவர். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்த போது ஜாதவ் பந்தை எதிர்கொண்டார். பந்து நீஷம் கால் ‘பேடில்’ பட்டுச் செல்ல ‘எல்.பி.டபிள்யு.,’ கேட்டு சகால் உள்ளிட்ட எல்லோரும் அப்பீல் செய்தனர். இதற்கு அம்பயர் மறுக்க நீஷம் கிரீசை விட்டு வெளியே சென்றார். அந்த நேரத்தில் மாற்றி யோசித்த தோனி, உடனடியாக பந்தை பிடித்து ரன் அவுட்…

Read More