இலங்கைவாசி அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும் இந்திய தலைவர்கள்
காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது. இலங்கையின் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா – ஒரு சலவைத் தொழிலாளி. அருகிலுள்ள அக்கரைப்பறில்தான் அவரின் கடை அமைந்துள்ளது. கடையின் சுவர் முழுக்க இந்தியத் தலைவர்களின் பிரேம் செய்யப்பட்ட படங்களாகவே உள்ளன. விவேகானந்தர் தவிர, அத்தனை பேரும் அரசியல் தலைவர்கள். “வட நாட்டுத் தலைவர்கள், தமிழ்நாட்டு தலைவர்கள் என்கிற பேதங்களின்றி, இவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்” என்கிறார் அழகய்யா. 1963இல்…
Read More