வங்கி அதிகாரி போல் நடித்து கவனத்தை திசை திருப்பிய நபர்: ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்து மாயம்

வங்கி அதிகாரி போல் நடித்து கவனத்தை திசை திருப்பிய நபர்: ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்து மாயம்

ஆட்டோவுக்கு தவணை கட்ட வந்த தந்தை மற்றும் மகனின் கவனத்தை திசைதிருப்பி வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஷெனாய் நகர், அருணாச்சலம் தெருவில் வசிப்பவர் முனுசாமி (50). இவரது மகன் சரண் குமார் (20). இவர்கள் சொநதமாக ஆட்டோ வைத்துள்ளனர். ஆட்டோவை நியூ ஆவடி சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் வாங்கி ஓட்டி வருகின்றனர். தவறவிடாதீர் கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை; முறையாக விசாரணை நடத்தாத ரயில்வே பெண் எஸ்.ஐ: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் முனுசாமி மாதம் ரூ.11,500/- தவணை கட்ட வேண்டும். வழக்கம்போல் இந்த மாத தவணைத் தொகையை கட்டுவதற்காக தன் மகன் சரண்…

Read More

“என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது” பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பு பேட்டிமர்சனம்

“என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது” பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பு பேட்டிமர்சனம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் மதுரை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 3 பேரும், நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போதும் வழக்கு விசாரணைக்கான ஆவணங்கள் வராததால், வழக்கு விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே கோர்ட்டுக்கு ஆஜராக…

Read More

போலி, ‘விசா’வில் சிக்கிய மாணவர்கள் நிலை…; அமெரிக்க போலீசார் அதிரடியால் பெரும் பரபரப்பு

போலி, ‘விசா’வில் சிக்கிய மாணவர்கள் நிலை…; அமெரிக்க போலீசார் அதிரடியால் பெரும் பரபரப்பு

வாஷிங்டன்: போலி, ‘விசா’ பெற்றுத் தந்து, வெளிநாட்டினர், அமெரிக்காவில் சட்ட விரோத மாக குடியேற உதவிய, எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவில் அமெரிக்கா சென்ற, ௧௦௦க்கும் அதிகமான இந்திய மாணவர்களும், கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 500க்கும் அதிகமான இந்திய மாணவர்களின் நிலை, கேள்விக்குறியாகி உள்ளது. கேள்விக்குறி,போலி விசா, இந்திய மாணவர்கள், நிலை, அமெரிக்க போலீசார், அதிரடி, பெரும் பரபரப்பு அமெரிக்காவில், சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் போர்வையில் ஏராளமானோர், போலி ஆவணங்கள் மூலம் குடியேறுகின்றனர். அமெரிக்காவில், மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கும், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும், அனுமதி வழங்கப்படுகிறது. மாணவர்கள் போர்வையில் சட்டவிரோத…

Read More