இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது. ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், “இனத் தேசியவாதத்தில் மதத்தின் பங்கு” என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில், மற்றும் கனடாவின் ஒன்டாரியோ மாகாண…

Read More

சபரிமலையில் வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்கள் கைது – கேரள போலீசார் நடவடிக்கை

சபரிமலையில் வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்கள் கைது – கேரள போலீசார் நடவடிக்கை

சபரிமலை செல்லும் வழியில் உள்ள வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்களை கேரள போலீசார் கைது செய்தனர். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதனால் கேரளாவில் கலவரங்கள் வெடித்தன. இதனிடையே சபரிமலை செல்லும் வழியில் எருமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு தமிழகத்தை சேர்ந்த பெண்கள் வர இருப்பதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் திருப்பூரை சேர்ந்த…

Read More

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, இன்று (ஜன.8) இரவு 9.50 மணிக்கு லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு, ஜனவரி 7 ம்தேதி அறிவித்தது.  பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜனவரி 7 ம்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஓரு நாள் நீட்டிக்கப்பட்டது. 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு இரவு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. மசோதா குறித்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது….

Read More

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது, இந்தியா

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது, இந்தியா

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை  இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது.  2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது…

Read More

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டி ராஜ்யசபா கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பல்வேறு கட்சிகள் எதிர்ப்பும்,ஆதரவும் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக இன்று ( ஜன.8) பார்லி.யில் லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் ராஜ்யசபாவிலும் மசோதாவாக்க உள்ளது. இந்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் இன்று (ஜன.8) நிறைவடைவதால், மேலும் ஒரு நாள் நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டி ராஜ்யசபா கூட்டத்தொடரை நீட்டிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டதால் கூட்டத்தொடரை…

Read More

ஏமனில் அமெரிக்க வான்தாக்குதலில் அல்-கொய்தா தளபதி பலி: போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்

ஏமனில் அமெரிக்க வான்தாக்குதலில் அல்-கொய்தா தளபதி பலி: போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்

அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்கிற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு சென்றது. அதன்படி அங்கு கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகை ஓட்டிவந்து ‘யுஎஸ்எஸ் கோல்’ கப்பலின் மீது மோதினர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி கப்பலில் இருந்த கடற் படைவீரர்கள் 17 பேர்…

Read More