இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பான அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஒன்பது நாட்கள் கடந்த நிலையில், நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர், அமைச்சர்களுக்கான கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றினை தெரியப்படுத்தும், விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி, 29 பேரைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அவரவருக்குரிய அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வரை வெளியிடப்படவில்லை. அமைச்சர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியே வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 20ஆம்…

Read More

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

திருவாரூர் இடைத்தேர்தல் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் தேர்தலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், அவர் என்னென்ன நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன? திருவாரூர் திமுகவின் கோட்டை. 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு தேர்தல் வரை திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதி. இந்திரா காந்தி மரணம், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1984-ம் ஆண்டு தேர்தலில்கூட இங்கே திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல 1991-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அலையிலும்கூட திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக…

Read More

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. நாட்டு மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பா.ஜ.க.விற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே…

Read More