எந்திரன் – 2 – சினிமா விமர்சனம்

எந்திரன் – 2 – சினிமா விமர்சனம்

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். நவம்பர் 30, 10:55 PM ‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம்? என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார்….

Read More

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலகல்

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலகல்

கத்தார் நாடு தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் கத்தார் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் சந்தித்தது. அந்த நாட்டுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. தரை வழியாகப் பொருட்களை, அண்டை நாடுகளான மற்ற அரபு நாடுகள் வழியாகத் தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் அந்தப் பாதையை சவுதி அரேபியா அடைத்ததால் பெரும் இன்னலுக்கு கத்தார் ஆளானது. கத்தார் உணவின்றித் தவிக்கும் சூழல் ஏற்பட்டு அந்நாட்டுப் பொருளாதாரம் முடங்கியது. இதன் பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுகத்…

Read More

இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர் அமைச்சர்களும் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டனர். பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிக்க சட்டரீதியான அங்கீகாரமில்லை எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. “இலங்கை மீது சீனாவும் இந்தியாவும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம்” இலங்கை வவுணதீவில் இரு போலீசார் சுட்டுக் கொலை…

Read More