பா.ஜ., ஆபத்தான கட்சியா? : அமைச்சர் ஜெயகுமார் பதில்
”மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாங்கள், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்,” என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.சென்னை மாநராட்சியில், இயற்கை பேரிடர் காலங்களில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, 4.86 கோடி மதிப்பீட்டில், 336 நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது.இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், பேரிடர் காலங்களில், சாலையில் விழும் மரங்களை, உடனுக்குடன் அகற்ற, 171 மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற, அதிக திறன் கொண்ட, 17 மோட்டர் பம்புகள் உள்ளன.தற்போது கூடுதலாக, 200 மரம்…
Read More