இரான் மீது இதுவரை இல்லாத அளவு தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

இரான் மீது இதுவரை இல்லாத அளவு தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை இரான் மீது இன்று விதிக்கவுள்ளது. இரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது. இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். ஞாயிறன்று ஆயிரக்கணக்கான இரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இரான் இடையே முரண்களை ஏற்படுத்திய டெஹ்ரானில் ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்க தூதரகத்தின் 39ஆவது ஆண்டு தினத்தில்…

Read More

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டு உள்ளார். 2009–ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. தற்போது, இலங்கையில்…

Read More

கங்கை நதியில் சரக்கு படகு இயக்கும் திட்டம்

கங்கை நதியில் சரக்கு படகு இயக்கும் திட்டம்

நாட்டில் முதல் முறையாக, உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கங்கை நதியில் இயக்கப்பட்ட சரக்கு படகை, பிரதமர் நரேந்திர மோடி, 12ல் வாரணாசியில் வரவேற்க உள்ளார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இருந்து, கங்கை நதியில், பெப்சிகோ நிறுவனத்தின், 16 கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட சரக்கு படகு, எம்.வி., – ஆர்.என்.தாகூர், இன்று புறப்பட்டது. இந்த கன்டெய்னர்களில், பெப்சி நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர்பான தயாரிப்புகள் உள்ளன. சரக்கு படகு பயணத்தை, கப்பல் துறை செயலர் கோபால் கிருஷ்ணா மற்றும் பெப்சிகோ நிறுவன உயரதிகாரிகள், கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த படகு, 12ல், உ.பி., மாநிலம், வாரணாசியை…

Read More