‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கலாம்!

‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கலாம்!

‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட, ‘நமோ’ மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம், ரூ.5 நன்கொடை அளிக்கும் நபர், மோடியை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெறலாம்’ என, பா.ஜ., அறிவித்து உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில், மீண்டும் வலுவான ஆட்சி அமைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக,நமோ மொபைல் ஆப் மூலம், மோடியையும், பொதுமக்களையும் இணைக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தனிப் பட்ட நமோ ஆப் மூலம், பொதுமக்கள் யார் வேண்டு மானாலும், கட்சிக்கு நன்கொடை வழங்கலாம். குறைந்தபட்சம், ரூ.5 ம், அதிக பட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும்…

Read More

திரைப்பட நகரில் நடிகர் ஷாருக்கான் படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

திரைப்பட நகரில் நடிகர் ஷாருக்கான் படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜீரோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு மும்பை திரைப்பட நகரில் ஷெட் அமைத்து நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை அந்த ஷெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கான் ஷெட்டில் தான் இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஷெட்டில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

Read More

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு – ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு – ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார். அதேவேளை,…

Read More

நிபந்தனைகளை ரணிலிடம் மட்டும் விதிக்காமல் மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாமே என்கிறார் சிவாஜிலிங்கம்

நிபந்தனைகளை ரணிலிடம் மட்டும் விதிக்காமல் மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாமே என்கிறார் சிவாஜிலிங்கம்

நிபந்தனையை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் விதிக்க வேண்டும் என அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாம். அதைவிடுத்து கண்ணை மூடி கொண்டு எவரையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சாவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. எவரை ஆதரித்தால்…

Read More

ஜனாதிபதி தேர்தலுக்கு மைத்திரி தயாரா என்று சவால் விடுக்கின்றது, ஐதேக.

ஜனாதிபதி தேர்தலுக்கு மைத்திரி  தயாரா என்று சவால் விடுக்கின்றது,  ஐதேக.

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மகாநாயக்கத் தேரரை நேற்று முன்தினம் சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு…

Read More

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் சுமந்திரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கும் என்கிறார் தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் சுமந்திரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கும் என்கிறார் தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட மாட்டார் என்றும், சுமந்திரனுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் சுமந்திரன் அமைச்சரவையையும் அலங்கரிப்பார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தேசிய பட்டியல் வழங்கப்படும் என்பதாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.அவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் முயற்சிக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர…

Read More

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்

வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் சென்றிருந்தனர். இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய மேலதிக ஊதியத்தை அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், போர்ட்…

Read More
1 2 3 9