இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149…

Read More

2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு

2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார். யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். படத்தின் காப்புரிமைMARK WILSON/GETTY IMAGESImage captionநடியா முராத் மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய…

Read More

ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது

ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது

”ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது,” என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. இதில், பேசிய பன்னீர் செல்வம், 2016 தேர்தலில் வெற்றி பெற்றது முதல், அவர் ஆட்சி அமைத்தது வரை நிகழ்வுகளை கூறினார். சசிகலா தரப்பினர், ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைத்ததாகவும், அது நடக்கக்கூடாது என்பதற்காக, முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார். தினகரன் குறித்து அவர் பேசியதாவது: ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், இதுவரை மன்னிப்பு கடிதம் கொடுக்கவில்லை.அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கிறார். எங்களை பிரிக்க முடியாது. ஆர்.கே.நகரில்,…

Read More