இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப்…

Read More

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்க பார்லி.,யால் வழங்கப்படும் மிக உயரிய ‘தங்கப்பதக்கம்’ விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பார்லி.,யின் சார்பில் சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படும். இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பார்லி., உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். கடந்த 23ம் தேதி(செப்.,23) தாக்கல் செய்த இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்லி., உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். முன்னதாக இவ்விருது அமெரிக்கர் அல்லாத…

Read More

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

காஞ்சிபுரம்: தொழிலதிபர் ரன்ஷிர்ஷா பண்ணை வீட்டில், ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையில் நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்விர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி குவியல் குவியலாக தொன்மையான சிலைகளை பறிமுதல் செய்தனர்.  இதனை தொடர்ந்து, ரன்விர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. திருவையாறில், அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மொகல்வாடி என்ற கிராமத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 50க்கும் மேற்பட்ட பழங்கால…

Read More