நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய தேர்தல் ஆணையாளராக ரொரென்ரோ வாழ் பொன் பாலராஜன் நியமனம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய  தேர்தல் ஆணையாளராக ரொரென்ரோ வாழ் பொன் பாலராஜன் நியமனம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த…

Read More

மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் என்று ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாகத் தெரிவித்தார்

மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் என்று ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாகத் தெரிவித்தார்

மக்களின் நம்பிக்கை,மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல்.அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார், கொழும்பில் செவ்வாயன்று இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்ப தற்காகவே. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். நாங்கள் தனிநபர்களாக இதற்கு…

Read More

புதிய அமைச்சரவை நியமனத்தின் வழியாக வடக்கு அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்

புதிய அமைச்சரவை நியமனத்தின் வழியாக  வடக்கு அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் செவ்வாயன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. 12 அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீள்குடியேற்றம், புனர் வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சர்களின் விபரம் வருமாறு, 01.நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் – மகிந்த ராஜபக்ஷ 02.போக்குவரத்து மற்றும் சிவில் விமா னச் சேவைகள் அமைச்சர் – நிமல் சிறிபால டி சில்வா 03.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் – சரத் அமுனுகம 04.துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் – மகிந்த சமரசிங்க 05.விவசாயத்துறை அமைச்சர் –…

Read More

அரசியலிலிருந்து விலக சுமந்திரனுக்கு காலம் கனிந்துள்ளது என்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

அரசியலிலிருந்து விலக சுமந்திரனுக்கு காலம் கனிந்துள்ளது  என்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கு வதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள் ளார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கு கிழக்கில் பெரும் ஆதரவுடன் இவ் அரசாங்கம் எவ்வாறு வந்திருந்ததோ, அதேபோன்றுதான் மலையக மக்களும் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்கம் நிலை தடுமாறி ஒரு நெருக்கடியான நிலைமைக்கு…

Read More

பிராம்டன் கனடாவில் நடைபெற்ற திருமண வைபவத்தில் வாழ்வாதாரம் வழங்கிய சிறப்பு

பிராம்டன் கனடாவில்  நடைபெற்ற திருமண வைபவத்தில் வாழ்வாதாரம் வழங்கிய சிறப்பு

டொரொன்டோவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஸ்ரீஸ்கந்தனும் அவரின் துணைவியாரும் தங்கள் மகளின் திருமண நிகழ்வில் நிவாரணம் செந்தில் குமரனின் ஊடாக போரில் வலது பாதத்தை இழந்த மஞ்சுளா ஜெயக்குமார் அவர்களுக்கு மாடு ஒன்றை தானமாக வழங்கியுள்ளனர். கொடிகாமத்தை சேர்ந்த மஞ்சுளா தனது கணவர் ஜெயக்குமாரின் சம்பளத்தில் இரு பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்ட நேரத்தில், செந்தில் குமரனின் நிவாரண நிதியத்தை நாட, அவரின் கோரிக்கையை பரிசீலித்து மாடு வாங்க $780 அனுப்பிட்டு விட்டதாக அறியப்படுகிறது. புதுமணத்தம்பதியினருக்கு வாழ்த்துக்கள். இது போன்று அனைவரும் சிந்தித்து செயல்படுவார்கள் என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் இப்படி ஒரு உதவியை செய்ய விரும்பினால் செந்தில் குமாரனை…

Read More

20 தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயார்

20 தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயார்

தமிழகத்தில், காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதி தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தயாராகி வருகிறது. 20 தொகுதிகளுக்கும், அமைச்சர்கள் தலைமையில், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் மறைவு காரணமாக, திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாகின.’தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 18 சட்டசபை தொகுதிகளும், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, 18 பேரும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால், 18 தொகுதிகளில், தேர்தல் நடத்த இயலாத நிலை ஏற்படும். மேல் முறையீடுக்கு…

Read More

ராஜபக்சேவுக்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை

ராஜபக்சேவுக்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார். மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க…

Read More

‘குல்பி ஐஸ்’ விற்கும் அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்

‘குல்பி ஐஸ்’ விற்கும் அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்

இந்திய குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார், 30. தேசிய சாம்பியன் ஆன இவர் 2008 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 2010 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார். சிறந்த வீரருக்கான அர்ஜுனா விருது வென்றவர். ஹரியானாவை சேர்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் 17 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்றார். 2014ல் இவர் சென்ற கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதன் பின் வாழ்க்கை திசை மாறியது. சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் தந்தை கடன் வாங்கினார். ஏற்கனவே பயிற்சிக்காகவும் கடன் வாங்கி இருந்தார். அரசும் கைவிட்டதால் வேறு வழியில்லாத நிலையில், கடனை அடைக்க தந்தையுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ‘குல்பி ஐஸ்’ விற்கிறார்….

Read More

முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை

முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய…

Read More

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்தது

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்தது

இந்தோனேஷியாவில் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. ஜகர்த்தாவில் இருந்து பங்கக்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லையன் ஏர் விமானம், புறப்பட்ட 13 நிமிடங்களில் நடுவானில் மாயமானது. காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து மாயமான விமானத்தை தேடிய போது, அது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது. 210 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 737 போரிங் ரக விமானத்தில் விமான பணியாளர்கள் உள்ளிட்ட 188 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள், இருக்கைகள் ஜாவா கடல் பகுதியில் மிதப்பதாக தெரிய வந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More
1 2 3 7