இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது” என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார். இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது…

Read More

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு சக பயணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அவை போலியானவை என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார். யாத்ரீகர் ஒருவருடன் ராகுல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், அவர் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோலின் நிழல் இல்லை எனக்கூறிய அவர், இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதைப்போல பா.ஜனதா மகளிரணியின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, டெல்லி எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியின் மானசரோவர் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர். பா.ஜனதாவினரின் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, கைலாஷ் மலைக்கு…

Read More

14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

குஜராத் மாநிலத்தில், 14 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும், ஹர்திக் படேலின் உடல் நிலை மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஹர்திக் படேல், 25. இவர், ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ‘குஜராத் மாநிலத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், படேல் சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இவர், ஆக., 25ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். குஜராத் தலைநகர் ஆமதாபாதில் உள்ள, தன் பண்ணை வீட்டில், போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டத்துக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இன்று(செப்.,7) 14வது நாளாக போராட்டம்…

Read More