இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிட தமது அரசாங்கத்தின் நிதி அச்சிடும் நிறுவனத்தில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பல நாடுகள் முற்பதிவு செய்துள்ளதாக, சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவர் லீ குயிஷென்க், சீன வங்கியினால் தயாரிக்கப்படும் மாதாந்த சஞ்சிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவற்றில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனம், உலகின் பாரிய நாணயத்தாள் அச்சிடும் நிறுவனமாகக் கருதப்படுகின்றது. இலங்கைக்கு தேவையான எவ்வித பணமும் சீனாவில் அச்சிடப்படுவதில்லை என இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டது….

Read More

எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் – டிரம்ப்

எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் – டிரம்ப்

2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது. இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஃபாக்ஸ் நியூசுக்கு தந்த பேட்டியில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறினார். அப்படி பணம் தந்தது…

Read More

மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட மனுஷ்யபுத்திரன் ( விக்கிபீடியாவின்படி இயற்பெயர் அப்துல் ஹமீது), அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பா.ஜ., முன்னாள் பிரமுகர் ஜமீலா தெரிவித்தார். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார். வழக்கமான ஒன்று கூட்டங்களிலும் கவிதைகளிலும் இந்து மத பழக்க வழக்கங்களை விமர்சித்து பேசுவதும் எழுதுவதும் மனுஷ்யபுத்திரனின் வழக்கம். அவரது எழுத்தை பலர் படித்தாலும், ஏற்கனவே இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தும் மற்று மதத்தை விமர்சிப்பதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. நாளாக நாளாக, தன்னை பேச கூப்பிடும் அமைப்புகளை மகிழ்விப்பதற்காகவே அவர் மாற்று மதத்தை விமர்சித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தி.மு.க.,வின் அனுதாபியாகவும் இருக்கிறார். ஊழியின்…

Read More

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு

இலங்கை சென்றுள்ள பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மடமுலனாவில் உள்ள ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும், மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில், ‘‘இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை…

Read More

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா விராட் கோலியின் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இமாலய இலக்கை நோக்கி தொடர்ந்து…

Read More

சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாகச் சத்தீஸ்கரின் 22மாவட்டத் தலைநகரங்களிலும் சிலை நிறுவப்படும். ராய்ப்பூரின் அருகே புதிதாக உருவாக்கப்படும் தலைநகருக்கு அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும். போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் நினைவாகச் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் ஒரு பிரிவு போக்ரான் பட்டாலியன் என அழைக்கப்படும். பிலாஸ்பூர் பல்கலைக்கழகம், ராஜ்நந்தகான் மருத்துவக் கல்லூரி, மார்வா அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கும் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என ரமன் சிங் தெரிவித்தார்

Read More

விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் ‘தி இந்து’ ராம்

விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் ‘தி இந்து’ ராம்

கலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார். அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய கருத்துக்கள்- கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன? என்.ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது . ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என…

Read More

தென்னாபிரிக்காவுடனான ஆட்டத்தில், இலங்கை 20-20 கிண்ணத்தை சுவீகரித்தது

தென்னாபிரிக்காவுடனான ஆட்டத்தில், இலங்கை 20-20 கிண்ணத்தை சுவீகரித்தது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக கொக் 20 ஓட்டங்களைப் பெற்றார். அதன்படி இலங்கை அணிக்கு 99 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இலங்கை…

Read More

இலங்கை தமிழர்கள் பற்றிய ஆல்பம் தயாரிக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,

இலங்கை தமிழர்கள் பற்றிய ஆல்பம் தயாரிக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது இவர் இசையையும் தாண்டி, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியர் பிரேமா காதல்’. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, ஒரு ஆல்பம் தயாரித்து இசையமைக்கவுள்ளார். அது இலங்கை தமிழர் இனப்படுகொலை பற்றியதாம். அவ்வாறு வெளிவந்தால் அது அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழர் தாயகப்பகுதியில் இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் என்கிறார் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில்  இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின்  ஆதரவுடன் இடம் பெறுவதாகவே  சந்தேகம் என்கிறார்  வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில் தொடர்ச்சி யாக இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் எழுந்துள் ளது என தெரிவித்த வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் அலு வலகத்தில் ஊடகவியலாளார் சந்திப்பு இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் எமது மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இதே போன்று வட மராட்சி…

Read More
1 2 3 4 5 7