இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கம்- கனடா. வருடாந்த ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும்

இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கம்- கனடா. வருடாந்த ஒன்றுகூடலும்  பொதுக்கூட்டமும்

கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் இலங்கை போக்குவரத்துச் சங்கம்- முன்னாள் ஊழியர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணி தொடக்கம் ஸ்காபுறோவில் 555 Neilson Rd, Scarborough, ON M1B 5Z என்னும் விலாசத்தில் உள்ள நெல்சன் பூங்காவில் நடைபெறும். மேற்படி நிகழ்வில் அனைத்து அங்கத்தவர்களும் குடும்பத்தினரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 647 500 3421, 416 831 4146. 905 554 0997 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

Read More

ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம்

ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர்  விஜய் தணிகாசலம்

எதிரவரும் யூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகால லிபரல் ஆட்சியில் அனுபவித்த துயரங்களால் ஒன்ராரியோ மாகாணம் தழுவி மாற்றம் ஒன்றை மக்கள் விரும்புவதை அனைத்து மக்கள் கருத்துக்கணிப்புகளும் தொடர்ச்சியாக காட்டி நிற்கின்றன. அந்தவகையில் ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியின் மாற்றத்தின் பிரதிநிதியாக கொன்செர்வெர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் இளையவர் விஜய் தணிகாசலம் தொகுதி வாக்காளர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார். இத்தேர்தல் கனடியத் தமிழர்களுக்கு வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். கனடிய பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்களை அனுப்பிய பெருமை ரொரன்ரோ கல்விச்சபை மற்றும் ரொரன்ரோ மாநகரசபைக்கு முதற் தமிழரை தெரிவு செய்து வரலாறு படைத்த பெருமையும் ரூச் பார்க்…

Read More

தமிழர்களையும் , தமிழினத்தையும் கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடவோ அன்றி பார்க்கவோ மாட்டோம் என உலகத் தமிழ் மக்கள் உறுதி பூணவேண்டும்

தமிழர்களையும் , தமிழினத்தையும்  கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடவோ அன்றி பார்க்கவோ மாட்டோம்  என உலகத் தமிழ் மக்கள் உறுதி பூணவேண்டும்

நோர்வே நாட்டிலிருந்து ஒரு உருக்கமான வேண்டுகோள்!! தமிழர்களையும் , தமிழினத்தையும் கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடவோ அன்றி பார்க்கவோ மாட்டோம் என உலகத் தமிழ் மக்கள் உறுதி பூணவேண்டும்” இவ்வாறு தீர்க்கமான ஒரு குரல் நோர்வே நாட்டிலிருந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் மக்களை நோக்கி விடுக்கப்பட்டுள்ளது. மேற்படிச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:- நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து…

Read More

மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

முன்னைய ஜனாதிபதியும் கொலைக்கரங்களுக்குச் சொந்தக்காரருமான மகிந்தா ராஜபக்;சா காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களில் யார் யார், மகிந்தாவின் ஆட்சியை விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மகிந்தாவின் ஏற்பாட்டில் கோத்தபாயவினால் திட்டமிட்டு கொல்லப்பட்ட லசந்த என்னும் சிங்கள மொழி பேசும் ஆங்கில பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொரூரமானது. இதைப்போன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன், மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் ஆகியோரது படுகொலைகள் எமது இனத்திற்கு இன்னும் சோகத்தை சுமந்து நிற்கும் சம்பவங்களாகவெ தொடர்கின்றன. அதிலும் சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த நாட்களில்…

Read More