அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் கூட்டாளிகள்: துருக்கி

அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் கூட்டாளிகள்: துருக்கி

அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கூட்டளிகள் என்று துருக்கி பிரதமர் பினாலியில் திரிம் விமர்சித்துள்ளார். ஜெருசலேமில் அமெரிக்க தூதரக அலுவலகம் திறக்கப்படுவதை எதிர்த்து பாலஸ்தீனர்கள் திங்கட்கிழமை காஸா எல்லையில் போராட்டம் நடத்தினர். இதில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாவும், 2,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் பாலஸ்தீனம் தெரிவித்தது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து துருக்கி பிரதமர் பினாலில் பினாலியில் திரிம் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டது. அமெரிக்காவும், இஸ்ரேலும் மனித குலத்திற்கு…

Read More

ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது

ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மஜத 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில்…

Read More

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு 14 அகதிகளை (கடந்த மே மாதம் 5ஆம் தேதி) ஏற்றிவந்த படகோட்டிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பணத்திற்காக இவர்கள் அகதிகளை அழைத்துவந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 14 இலங்கை அகதிகள் பாதுகாப்பற்ற படகு பயணத்தின் மூலம் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர். இலங்கைக் கடற்படையினர், இவர்களைக் கைதுசெய்து, காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாக்குமூலங்களைப் பதிவுசெய்த போலீசார் 14 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் இவர்களை விடுத்த பின்னர், குறித்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். முறையான வேலைத் திட்டம் இருக்கும் போது குழந்தைகளுடன்…

Read More