‘காலா’ பாடல்கள் வெளியீடு!

‘காலா’ பாடல்கள் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Read More

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 131 பேரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் கடந்த முதலாம் தேதி இலங்கையர்கள் என நம்பப்படும்…

Read More

உலகம் செய்தி ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

உலகம் செய்தி  ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் ஏற்படும் சர்வதேச அரசியல் பதட்டம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை தடுக்கும் வகையில், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்தன. ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டார்.அதன் பயனாக, 2015ல், ஈரான் நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். அதன் முடிவில், ‘அணு ஆயுதம் தயாரிப்பதில்லை’ என்று, ஈரான்…

Read More