சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ரீதியில் சிறுவர் பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மீதான கரிசனை குறைவடையும்போது, அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

சிரசாசனம் செய்யும் அமலா பால்

சிரசாசனம் செய்யும் அமலா பால்

அமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கு இடையே யோகா செய்ய தவறுவது இல்லை அமலா பால். அமலா பால் சிரசாசனம் அதாவது தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்ய கற்றுக் கொண்டுள்ளார். அவர் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. தலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன். சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம் என்கிறார் அமலா பால்….

Read More

தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தின் மீது முழு வேகத்தில் கவனம் செலுத்துவது என, பா.ஜ., தேசியத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அடுத்தாண்டு வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் பா.ஜ.,வை முழுவேகத்தில் வளர்த்தெடுப்பதோடு, தேர்தலில் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் உள்ளது. இதற்கான பொறுப்பை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதும், அடிக்கடி தமிழகத்துக்கு வருவார் நிர்மலா சீதாராமன்.

Read More