தியா – விமர்சனம்

தியா – விமர்சனம்

நடிகர்: நாக சவுரியா நடிகை: சாய் பல்லவி டைரக்ஷன்: விஜய் இசை : சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு : நீரவ் ஷா அம்மாவின் வயிற்றில் கருவாக இருந்த ஒரு பெண் குழந்தை தன்னை கலைத்த டாக்டரையும், ‘கலைப்பு’க்கு காரணமாக இருந்தவர்களையும் பழிவாங்கும் கதை. உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லும் டைரக்டர் விஜய்யிடம் இருந்து இன்னொரு படம் “தியா”. நாக ஷவ்ரியாவும், சாய் பல்லவியும் காதலன்-காதலி. படிக்கிற பருவத்திலேயே இருவரும் எல்லை மீறுவதால், சாய் பல்லவி கர்ப்பமாகிறார். குடும்ப டாக்டர் சுஜிதா திட்டுகிறார். இரண்டு பேர் குடும்பத்துக்கும் பிரச்சினை தெரியவர-முதலில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின்னர் சமாதானமாகி, திருமணம் பேசி முடிக்கிறார்கள். சாய் பல்லவியின் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கிறார்கள்….

Read More

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஒரே நேரத்தில் 8,500 பேரை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக, கடந்த மாதம் 23 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அவர், அங்கு நடைபெற்று வரும் தனது கட்சிக்கான இணையதளப் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். அமெரிக்காவில் இருந்து வருகிற 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை திரும்புகிறார் ரஜினி. ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது….

Read More

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 14-ம் தேதி வந்திருந்த அவர், ஆழ்வார்குறிச்சி சிவசைலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு நேற்று அவர் வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய…

Read More