அடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

அடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

2020 இல் இடம் பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் என்றும்,அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதுபற்றி யாரேனும் உங்களை அணுகினார்களா? பதில்: இல்லை. ஆனால்,பேசப்படுகி­றது. அது­பற்றி முடிவு செய்­வ­தற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்­றன என்றுநான் நினைக்கிறேன். அது முன்னாள் ­ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்சாவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய- பொருத்தமான வேட்பாளர் யார்…

Read More

அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன்

அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் நன்கு உணர்கின்றேன்

முதல்வர் “விக்கி” விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியிடமிருந்து எனக்கு அழைப்பு வரக் கூடியசாத­தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாக தேர்தலில் நிற்­கலாம். ஆனால் கடந்­த­கால அனுபவங்களின் அடிப்­ப­டை­யிலும் மூலோபாயரீதி­யா­கவும் நடை­முறை அடிப்­ப­டை­யிலும் அவ்வாறு நிற்­பதால் பல பிரச்சினைகள் இடை­யூ­றுகள் ஏற்­பட வாய்ப்­புகள் உள்­ளன. புதியகட்­சி­யொன்றை தொடங்­கு­மாறு பலரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றனர். கொள்கை ரீதி­யாக உடன்­படும் அனைவருடனும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டலாம் என்றும் கூறு­கின்­றனர். ஆனால் இதற்­கு­ரிய காலம் கனிந்­து­விட்­டதோ என்­பதை நான் அறியேன் என்றும் வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டி­யுள்ளார். எதிர்­வரும்…

Read More

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியை தொடர பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவன் ஒரு வன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்ததி யாகேஸ்வரன் நிலாபவன் (வயது16) என்ற மாணவனே மேற்படி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.தசாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார். அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறு பேற்றில் சிறந்த பெறு பேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நீர் வேலியில் உள்ளதனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி நின்று யாழ் நகர்ப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர…

Read More

வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் றெஜினோல்ட் கூரேயே நீடிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். எட்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது. இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுநர், கே.சி.லோகேஸ்வரன், வடமாகாண ஆளுநராக மாற்றம் பெறவிருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன கடந்த செவ்வாய் கிழமையன்று சந்தித்தார். இதன்போதுவடக்குமாகாணஆளுநராகறெஜினோல்ட் கூரே அங்கு தொடர்ந்து பணியாற்றி விருப்பம் தெரிவித்ததால் அவரே வடக்கு மாகாண ஆளனராக…

Read More