ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானக் கதவை இழுத்து மூடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் வைத்தனர். ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை…

Read More

தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை

தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை

2016 அமெரிக்கா அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி வேட்பாளரான டெனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சேவை செய்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தகவல்திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூகர்பெர்க் . செனட் சபை, பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தகவல்திருட்டு என்னுடைய தவறு தான். அதற்காக…

Read More

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம்…

Read More