சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா எம்இஎஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். வரும்…

Read More

மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்

மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்

போலி செய்திகள் வெளியிட்டால் 6 ஆண்டு சிறைத்தண்டனை என்ற சட்டத்திற்கு மலேசிய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.பொய்ச்செய்தி, போலிச்செய்தி என்று முத்திரையிட்டு, உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்க சட்டத்தின் மூலம் வழிவகை செய்து கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டு போடுகிறது ஆளும் மலேசிய அரசு என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.இந்தச் சட்டம் உள்நாட்டு ஊடகம் மட்டுமல்லாது அயல்நாட்டு ஊடகங்களையும் இலக்காக்கியுள்ளது. பிரதமர் நஜிப் ரஸாக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விமர்சனங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியே இந்த ‘பொய், போலிச் செய்தி சட்டம்’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.3வது முறையாக பிரதமராக நஜிப் ரஸாக் முயற்சிகள்…

Read More

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் பலரும் வரிசைகட்டி வந்து போலீஸ் ஸ்டசேனில் சரணடைந்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பெற்ற நாள் முதல் ரவுடிகள், மற்றும் கிரிமினல்கள் மீதான நடவடிக்கை இறுகியது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம் ஆண்டு 1144 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் 34 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2744 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடுமையான குற்றங்களை செய்துவரும் ரவுடிகளை அம்மாநில போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தி வருவதை அறிந்த குற்றவாளிகள் போலீஸ் நியைங்களில் சரணடைந்து வரத்துங்கியுள்ளனர். மேலும் தங்களது ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர்…

Read More