குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வங்கக்கடலில் மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு,…

Read More

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்?

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்?

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த…

Read More

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காக கிடைக்கும் இ-மெயில் முகவரிகளுக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார்” எனக்கூறி தமிழிசை கிண்டலடித்தார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இ-மெயில் அனுப்பப்படுவதாக அக்கட்சி விளக்கம் அளித்தது. மேலும், தமிழிசை தன்னுடைய…

Read More