மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கை விரித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று (வியாழன்) வெளியேறுகிறது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர். ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது. அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும்,…

Read More

அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியது உண்மை என்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். மதுரவாயலில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசும்போது, ‘தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப நான் வருகிறேன்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றது குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் சளைக்காமல் பதில் அளித்தார்….

Read More

சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனம்: எச்.ராஜாவுக்கு ரஜினி கண்டனம்

சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனம்: எச்.ராஜாவுக்கு ரஜினி கண்டனம்

சிலையை உடைப்பேன் என்பதும், சிலையை உடைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று எச்.ராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் திரிபுராவில் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா முகநூலில் பதிவிட்டது சர்ச்சையை எழுப்பியது. இதை அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டித்தனர். இந்நிலையில் அன்று இரவே பெரியார் சிலை சில இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எச்.ராஜா தனது பதிவுகளை நீக்கினார். ஆனால் அன்று முழுதும் ரஜினியோ, கமலோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இரவு 10 மணி அளவில் கமல் ட்விட்டரில் மற்ற கட்சித்தலைவர்களுக்கு புத்தி சொல்வது போல் இதை கண்டித்திருந்தார். ஆனாலும் ரஜினிகாந்த் வாயே திறக்கவில்லை. வழக்கமாக…

Read More