சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்

சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடர்பான பணிகளிலும், மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சியை அறிவிப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ள ரஜினிகாந்த், சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் புளூடிக் வெரிஃபைடு குறியீட்டுடன் ரஜினிகாந்த் பக்கம் உள்ளது. பேஸ்புக் பக்கத்தில் தனது முதல் பதிவாக “ வணக்கம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வணக்கம்! வந்துட்டேன்னு சொல்லு! என்ற பதிவையும் இட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் கணக்கு துவங்கி அவ்வப்போது சில தகவல்களை பதிவு செய்து வருகிறார். மக்கள் நீதி…

Read More

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மார்ச் 31-ல் வைகோ நடைபயணம்: திமுகவுடன் கூட்டணி தொடரும்; மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மார்ச் 31-ல் வைகோ நடைபயணம்: திமுகவுடன் கூட்டணி தொடரும்; மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்ச் 31-ம் தேதி மதுரையில் இருந்து வைகோ தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என மதிமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திராவிட இயக்கத்தின் ஒற்றுமையைக் கட்டமைக்கிற வரலாற்றுக் கடமையை மதிமுக மேற்கொண்டு வருகிறது. திமுகவுடன் நட்பும் தோழமையும் தொடரும். காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அரசியல் சட்ட அமர்வின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்துக்கு…

Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்புகிறார்கள்: எச்.ராஜா மீது கமல் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்புகிறார்கள்: எச்.ராஜா மீது கமல் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து திசை திருப்பும் ஏற்பாடு இது. பெரியாரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் பாருங்கள் என்று கமல் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”பெரியார் பற்றிய கூற்று கீழ்த்தரமானது. சட்ட வல்லுநர்களிடம் கேட்க வேண்டும், அதில் தண்டனையும் உள்ளதா என்று. மற்றபடி பெரியாரின் சிலைக்கு போலீஸார் பாதுகாப்பை விட மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இது போன்ற கலக வார்த்தைகள் தேவை இல்லை. முக்கியமாக திசை திருப்பாமல் இருக்க வேண்டும். இலக்கு என்ன என்பது பற்றி பாராமல் திசை திருப்பாமல் இருக்க வேண்டும். எது திசை திருப்பல் என்று கொஞ்சம் யோசித்துப்…

Read More

ஹெச்.ராஜா விளக்கம் ஏற்புடையதல்ல; நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஹெச்.ராஜா விளக்கம் ஏற்புடையதல்ல; நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பெரியார் சிலை குறித்த பதிவுக்கு ஹெச்.ராஜா அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ”திரிபுராவில் நடந்த சிலை அகற்றுதல் நிகழ்ச்சி, தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற பெரியார் சிலைக்கு ஏற்பட்ட அவமானம். இதை எல்லாம் பார்க்கும்போது பாஜக கட்சி வேதனை அடைகிறது. இந்தச் செயல்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்பதை பிரதமரும், பாஜக தலைவர் அமித்ஷாவும் தெளிவுப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்துக்கு எதிரான நிலையில் எவருடைய சிலையையும் யார் அவமானப்படுத்தினாலும்…

Read More