இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

இலங்கை தமிழர் பிரச்சினையின் போது திமுக எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று மீன்வளத் துறை அமைச் சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வலியுறுத்த முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம் எழுதப்பட்டது. முதலில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசுங் கள் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் அழைத்துப் பேசினார். அங்கே உள்ளே ஒன்றை பேசிவிட்டு, வெளியே வந்து வேறுவிதமாகப் பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல. முதல்வர் தலைமை யில்…

Read More

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல் நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை அறிவிப்பதற்கு முன்பாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் மற்றும் செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேர்காணல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஜனவரியில் வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. பின்னர் 2-ம் கட்டமாக தேனி, நீலகிரி உள்ளிட்ட ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேர்காணல்…

Read More

ஏர்செல் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ட்ராய், செல்போன் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ட்ராய், செல்போன் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வாடிக்கையாளர்களை பாதிக்கும்வகையில் செயல்பட்ட ஏர்செல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சரவணகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டு 25 லட்சம் பேர் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பைப் பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6500 டவர்கள் வாடகை பாக்கி காரணமாக செயல்படவில்லை என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண…

Read More