காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

“காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நாமக்கல்லில் நடந்த வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் 11-வது தமிழ் மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “வங்கிகளில் தொழில் செய்வதாக கூறி கடனை பெற்று கையாடல் செய்துவிட்டு பிற நாடுகளுக்கு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் தாங்கள் பெற்ற கடனை இந்தியாவில் முறைப்படி முதலீடு செய்து இருந்தால் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இந்திய அரசையும், மக்களையும் ஏமாற்றி தப்புபவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் அரசு இதற்காக புதிய சட்டத்தை கொண்டு வந்து உள்ளது….

Read More

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

வட கிழக்கு மாநில சட்டசபை தேர்தல்களில் திரிபுரா, நாகலாந்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை பெற்று முன்னணியில் உள்ளது. திரிபுரா சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, பாஜக மாறி மாறி முன்னிலை வகிப்பதால் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன. திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன. இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு…

Read More

மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு விவகாரத்தில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் தேவகோட்டையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகர தலைவர் பஞ்சநாதன் வரவேற்றார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசினர். பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் செய்தது கார்த்தி சிதம்பரம் மட்டுமல்ல. அவரது தந்தை ப.சிதம்பரமும், காங்கிரஸ் கட்சியும் தான். ஆறு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குள் தவறான கருத்துக்களை சிலர் கூறுகின்றனர். மதுவிலக்கு பிரச்சினையில் பெண்களுக்கு…

Read More