இனி எங்கள் வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை நடிகை ஸ்ரீதேவி கணவர் உருக்கம்

இனி எங்கள் வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை நடிகை ஸ்ரீதேவி கணவர் உருக்கம்

மும்பையில் மக்கள் வெள்ளத்தில் நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்திய திரையுலகின் ‘கனவு கன்னி’ என வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தார். அங்கு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் கடந்த 24–ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக இறந்தார் என கூறப்பட்ட நிலையில், துபாய் போலீசார் வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஸ்ரீதேவி குளியல் அறையில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் மூழ்கியதில் மூச்சுத்திணறி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அவர் மரணம் அடைந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது….

Read More

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12-ந்தேதி பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி வரை ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்ய கால அவகாசத்தை பொதுப்பணித்துறை நீட்டித்திருந்தது. இந்தபணியில் ஈடுபடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி நிறுவனம், பி.எஸ்.கே நிறுவனம், வெங்கடாஜலபதி நிறுவனம், மாணிக்கம் நிறுவனம், ராஜதுரை நிறுவனம் ஆகிய 5 கட்டுமான நிறுவனங்கள்…

Read More

காவிரி வாரியம் பற்றி பிரதமருடன் சந்திப்பு எப்போது? காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி வாரியம் பற்றி பிரதமருடன் சந்திப்பு எப்போது? காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி வாரியம் அமைப்பது பற்றி முடிவு எட்டி 9 நாட்களாகியும் பிரதமரைச் சந்திப்பதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்து இன்றுடன் 9 நாட்களாகி விட்டன. ஆனால், பிரதமரை சந்திப்பதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி…

Read More