மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் விடியலைத் தேடி அமைப்பின் ஆதரவில் இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் அவரது அன்னை சாரதா ஆகியோர் மொன்றியால் வாழ் வர்த்தக நண்பர்கள் வழங்கிய ஒத்துழைப்போடு நடத்திய “விடியலைத் தேடி” இசை நிகழ்சசி கடந்த சனிக்கிழமை 24ம் திகதி மாலை மொன்றியால் நகரின் மேரி ஆன் உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மொன்றியால் நகரில் உள்ள ஆற்றல் மிகு பாடக பாடகிகள் மற்றும் நடன மணிகள் அத்துடன் ந◌ாடக நடிகர் ஆகியோர் மேடையில் தங்கள் படைப்புக்களைத் தந்தனர். அத்துடன்; ரொரன்ரொவிலிருந்து கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் “வைகைப் புயல்” பாலாவோடு இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சியையும் வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம…

Read More

பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

கனடாவில் மிக நீண்ட காலமாக இசைத்துறையில் அறிவூட்டல் மற்றும் மேடைநிகழ்ச்சி அத்துடன் சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் பணி ஆகியவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா” (யூனியர் சிங்கர்- கனடா) இசைப் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் (First three) முதல் மூன்று வெற்றியாளர்களையும் மேலும் மூன்று வெற்றியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் போட்டி, மண்டபம் நிறைந்த சபையோர் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதி கலைக் கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் தனது பிள்ளைகள் மூவர் மற்றும் பெற்றோர் மாணவர்கள் அத்துடன் வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவோடு…

Read More

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை,…

Read More

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது என்பது தொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது. ‘பேஸ்புக்’ பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். “இந்தியர்களின்…

Read More

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச காலத்தின் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது. கொழும்பு துறைமுக நகர திட்டம், அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்தது. ஏற்கெனவே பாகிஸ்தானின் குவாதர், மியான்மரில் கியான் பியூ, வங்கதேசத்தில் சொனடியா துறைமுக திட்டங்களை குத்தகை அடிப்படையில் சீனா மேற்கொண்டு வருகிறது. இதேபாணி யில் இலங்கையின் துறைமுக திட்டங்களில் சீனா கால் பதித்தது. தேவைப்பட்டால் இந்த துறைமுகங்களை ராணுவரீதியாக சீனா பயன்படுத்தும் என்று…

Read More
1 2 3 9