தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் ஒரு கட்சிசார்பாக செயற்படுவதாகவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் நீதிமன்றமும் பொலிஸாரும் உடன்பாட்டுடன் இயங்குகின்றனர் என்ற பொருள்பட பத்திரிகையில் கட்டுரை எழுதியமை தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை பிறப்பித்துள்ளது இந்த றட்ணஜீவன் கூல் என்பவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக வருவதற்கும் முயன்றவர் என்பதும் தற்போது எம்பி சுமந்திரன் அவர்களின் சிபார்சின் பேரிலேயே இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார் என்பதும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் பெறப்பட்டவையாகும். இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையானது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் தனது தேர் தல் பரப்புரைக்…

Read More

வட்டுக்கோட்டை பகுதியில் வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில்  வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான  ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றில் இருந்தே குறித்த பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்ப ட்டுள்ளன. இந்நிலையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை குறித்த வயற் காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்று நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.இதனையடுத்து குறித்த ஆயுதங்கள் காணப்படுவது தொடர்பாக குறித்த வயற்காணிக் குரியவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு…

Read More

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினர் அபகரிப்பதில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட காணி உரிமையாளர் அதனை எதிர்த்துள்ளார். எனவே அந்த உரிமையாளரை, கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் மனித வுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த வாரம் முறைப் பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை வீதி, பருத்தியடைப்பு, ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள இரண்டு பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக தங்களோடு ஒத்துழைக்கும் வண்ணமும் மேற்படி காணியின் உரிமையாளருக்கு யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள த்தினரால் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. தனது காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு தருமாறு காணி உரிமையாளர் அயல்;பகுதி…

Read More

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார் ஜனாதிபதி

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார்  ஜனாதிபதி

மோசடியில் ஈடுபட்ட திருடர்களுக்கு சுதந்திரக் கட்சியில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த அணியினருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். மேலும் குற்றச் சாட்டுகள் அற்ற தூய்மையான அரசியல்வாதிகளுக்கே தாம் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். திருடர்களைப் பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு தூய்மையான அரசி யல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்துகொள்ள முடியாது இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார். சிலரால் எமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாதென்பதை அறியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரை யும் எம்முடன் ஒரே அணியில் அணிதிரளு மாறு நான்…

Read More