முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக  வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வட மாகாண சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முல்லைத்தீவில் சிங்களவர்களுக்கு மிகப்பெரிய நீர்ப் பாசனத்திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டு வரும் இரகசிய நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதனை வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது. மகாவலி எல் ஜடுஸ வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி கிவுல் ஓயா எனும் பெயரில் சிங்களவர்களுக்கு என மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதனை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த திட்டம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின்…

Read More

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய இராணுவம்

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய  இராணுவம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை யுத்த காலத் தில் இராணுவ சோதனைக்கு உட்படுத்தியது போன்று தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய பொலி ஸார் சோதனைக்கு உட்படுத்தி யது தொடர்பில் மக்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ள னர். எங்கள் பிள்ளைகள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி உயிர் துறந்தார்களோ அவர்களை கொண்டே எம்மவர்களால் தம்மை சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி மக்கள் உயிர் துறந்தார்களோ,…

Read More

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு தனது அறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி திலக் மாரப்பனை குழுவை நியமித்தது.குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிணைமுறி மோசடி…

Read More

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில்  அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தாம் ஆய்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்.தமிழர்களின் கலாசார தலைநகர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம், நீண்ட கிரிக்கெட் வரலாற்றைக்  கொண்டிருக்கின்ற போதிலும், 1970களில் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் வடக்கில் எந்தவொரு சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களும் அமைக்கப்படவில்லை.இந்த நிலையிலேயே தற்போது மண்டைதீவில் சர்வதேச தரம்வாய்ந்த மைதானத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு முன்னர் ஆனையிறவை அண்டியுள்ள பகுதிகளில் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்திகள்…

Read More