வலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா

வலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருப்பதாக சீன அரசின் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறையின்கீழ் செயல்படும் ‘சர்வதேச ஆய்வுகளுக்கான சீன நிறுவனம்’ சார்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், அதன் துணைத் தலைவர் ரோங் யிங் தெரிவித்திருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாகவும் துடிப்பானதாகவும் மாறியிருக்கிறது. உலக அளவில் சிறந்த சக்தியாக இந்தியாவை எழுச்சிபெற செய்வதற்காக தனித்துவமான வியூகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சவாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் நெருக்கமடைந்துள்ளன. பரஸ்பரம் பலனளிக்கும் வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியுள்ளது. பிரதமர் மோடி,…

Read More

ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது

ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது

ஈரானில் 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக்கப்பட்ட பெண்களுக்கான உடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராடும் விதமாக தலை முக்காடை நீக்கி தெருக்களில் நடந்த பெண்கள் 29 பேரை தெக்ரான் போலீசார் கைது செய்து உள்ளனர் என ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. பொது உத்தரவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தவர்கள் என்று அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என செய்தி வெளியிட்டு உள்ள ஈரானிய மீடியாக்கள் இதுதொடர்பாக விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை ஈரானில் மிகவும் பிசியாக இருக்கும் தெருவில் பெண் ஒருவர் தலையில் முக்காடு அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இப்போது பெண்கள் போராட்டம்…

Read More

பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா…

Read More

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம். தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் மடக்கி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜின்கியா ரகானே உயர்தர…

Read More