ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஊழல் குற்றச்சட்டு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி பங்குபத்திரங்கள் வெளியிட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அந்த விவகாரம் குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றிக்கொண்டு இருந்த போது அதுகுறித்து விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவர் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்து டிபாசிட்டையும் பறிகொடுத்தது. இது குறித்து, கட்சியின் பல்வேறு மட்டங்களிலும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்கள் கடுமையாக உள்ளன.இதையடுத்து, ஸ்டாலின் தரப்பினர் தேர்தலுக்கு முன் என்ன நினைத்து, இடைத்தேர்தலை எதிர்கொண்டது, என்பது குறித்து, கட்சியின் பல மட்டத் தலைவர்களிடமும் எடுத்துக் கூறி வருகின்றனர்.அவர்கள் கூறி வருவதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம்தான் பிரதானம் என்பதை தி.மு.க., முன் கூட்டியே கணித்து விட்டது. அதனால், பணத்தை வாரி இறைக்கத் திட்டம் தீட்டிய மதுசூதனன் மற்றும் தினகரனோடு பணம் கொடுத்து போட்டிப் போட வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதனால்தான், கடைசி வரை, தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.எப்படி…

Read More

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ”திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,” என, பேசியுள்ளார். அதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், ‘பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின்…

Read More