இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ்…

Read More

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

நிதியுதவியை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களை ஏமாற்றி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குரம் தஸ்தகிர் கான் கூறியதாக அந்நாட்டு மீடியாவில் வெளியான செய்தி: ஆப்கனில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு உதவி, புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானை குறைகூறும் அமெரிக்காவுடன், கண்டிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் அமெரிக்காவிற்கு வழங்கி வந்த மிகப்பெரிய ஒத்துழைப்பை நாங்கள்…

Read More

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம் முதல் உயர்த்தப்படும் எனவும் தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் பிப்ரவரி மாதம் எம்எல்ஏக்களுக்கு நிலுவை தொகையுடன் ரூ. 3 லட்சம் கிடைக்கும். எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,…

Read More