2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

கனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும்.
இவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு.
இந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ் மக்களும் ஏனைய இன மக்களும் பாராட்டுகின்றஅளவிற்குபணிகளைஆற்றினார். ஆனால் காலப் போக்கில் அவரதுஅரசியல் சார்ந்தபோக்கிலும் தடுமாற்றங்களும் தவறுகளும் காணப்பட்டுதமிழ் மக்களாலேயேவிமர்சிக்கப்படும் ஒருவராகதோன்றிவருகின்றார்.
தொடர்ந்துஎமதுதமிழ் மக்கள் சார்பில் முதன்முதலாகபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவராகராதிகாசிற்சபைஈசன் அவர்களும் தனது இரண்டாம் கட்டத் தேர்தலில் தான் சார்ந்தகட்சியில் போட்டியிட்டும்,தோல்வியைத் தழுவினார். இதற்குகாரணம்,தான் பாராளுமன்றஉறுப்பினராகப் பதவிவகித்தகாலத்தில் அவரால் மக்களின் மனங்களையும் தமிழர் சமூகம் சார்ந்ததலைவர்களையும் வென்றெடுக்கமுடியாமல் போய்விட்டது.
இவ்வாறானஒரு சூழலில்தான் ஒன்றாரியோமாகாணஅரசின் மட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் முக்கியத்துவம் நன்குஉணரப்படுகின்றஒருகட்டம் உருவானது. ஓன்றாரியோமாகாணத்தின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராக,பெற்றிக் பிரவுண் அவர்களைதேர்ந்தெடுக்கும் உள்ளகத் தேர்தலிலதமிழ் மக்கள் அளித்துஅதிகபட்சஆதரவுதான் அவரைக் கட்சியின் தலைவராகஉயர்த்தியதுஎன்பதை முழு கனடியஅரசியல்வாதிகளுமேஏற்றுக்கொண்டார்கள் என்பதும் உண்மையே.

இவ்வாறாகமுக்கியத்துவம் பெற்றதமிழ் மக்களின் அரசியல் அக்கறைஅல்லதுஅரசியல் ஈடுபாடு,நுழைவுஎன்பதுதற்போதுமிகவும் கேலிக்கிடமாகமாறிவிட்டதாஎன்றுசந்தேகப்படுகின்றஅளவிற்குநிலைமைமோசமாகமாறிவிட்டது. தற்போது 2018ம் ஆண்டுநடைபெறவுள்ளஒன்றார்pயோமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தங்களைபலர் தயார்படுத்திவருகின்றார்கள். ஆனால் எமதுபார்வைக்கு,நாட்கள் நெருங்கநெருங்க,எமதுதமிழ் மக்கள் சார்ந்தவேட்பாளர்கள் தொடர்பில் “அசிங்கமானசெயற்பாடுகள்”அரங்கேறும் என்;றேநாம் கணிக்கும் அளவிற்குசம்பவங்கள் இடம்பெறுவதைகவனிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறானமுறைதவறியசெயற்பாடுகள் ஒன்றாரியோமாகாணசபைக்கு 2018ம் ஆண்டுநடத்தப்படவுள்ளதேர்தலில் இடம்பெறுமானால்,அவ்வாறானசெயற்பாடுகளுக்குஅரசியல் கட்சிகளாஅன்றிதமிழ் மக்களின் அறியாமையும் அவசரமுமாகாரணம் என்பதைநாம் பொறுத்திருந்தேபார்க்கவேண்டும்.