தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி…

Read More

ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே.நகரில் போட்டியிட இன்று ஒரே நாளில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்,தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனிக்கொடியுடன் வந்தனர். அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினார். தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என ஒருவர் கேட்க, அவருடைய கனவுகள் நிறைவேறட்டும் என்று பதிலளித்தார். உடனேயே…

Read More

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்தா?- தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்தா?- தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் பொது வினியோகத் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலவச அரிசித் திட்டம் கூட ரத்து செய்யப்படலாம், மற்ற உணவு தானியங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் காரணம் காட்டி, நியாய விலைக்…

Read More

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் ‘ஒக்கி’ புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் ‘ஒக்கி’ புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு

தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘ஒக்கி’ புயல் சேதம் தொடர்பாக அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”’ஒக்கி’ புயலினால் தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டி.கே.இராமச்சந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்டத்தில்…

Read More