அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா? 1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துவது எதற்காக. இந்த சோதனைகளின் பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது என டிடிவி தினகரன் ஆவேசமாக பேட்டியளித்தார். சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது: ‘‘வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைபற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்….

Read More

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். இவர் நடிகர்கள் மற்றும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு ஜோதிடராக இருந்துள்ளார். மேலும் இவர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் குடும்பத்துக்கு ஆஸ்தான ஜோதிடராக பல ஆண்டுகாலமாக இருந்துள்ளார். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் பங்கு சந்தை புரோக்கராகவும் இருந்து வந்தார் இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 9-ந் தேதி மாலை 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட் டது. அங்கிருந்த கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு பத்திரங்கள் சிக்கின. நேற்று 2-வது நாளாகவும் அவரது வீட்டில்…

Read More

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத்…

Read More

போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி

போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி

மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப்…

Read More