யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோ படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகர மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது உயர்ந்த கலாச்சாரத்தில் சென்னையின் பங்களிப்பு மிகவும் மதிப்பானது. யுனெஸ்கோ தனது படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய தருணம். சென்னை மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2004-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, படைப்பாற்றலை காரணியாகக் கொண்டு நிலையான வளர்ச்சியை எய்திட…

Read More

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று (நவ.9) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனைக்குப் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் 150 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அடையாறில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பல்வேறு கேள்விகளுக்கும் பதில அளித்தார். “எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. காலை 8.30 மணியளவில் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவரும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரும்பி…

Read More

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும் இருமுறை பைபிள் வாசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் லாசரஸ் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து கேட்டபோது, வைகோ “நான் கிறித்துவனல்ல. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எனது மருமகளின் பூஜையறையில் எல்லா தெய்வங்களின் உருவங்களும் இருக்கும்” என்றார். லாசரஸ் பேசும் வீடியோவில், வைகோவும் அவரது குடும்பத்தாரும் கிறித்துவர்களாக மாறிவிட்டதாகவும், இயேசுவின் சேவைக்கு அவர்கள் தம்மை அர்பணித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். “அவரது மகளும், மாப்பிள்ளையும் கிறித்துவர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்….

Read More