ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 8 நாட்களாக தேங்கி இருக்கும் நீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 31-ந்தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது. முதல் 2 நாட்கள் நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீ புரம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த…

Read More

தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்…

Read More

மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மற்றவர் இயக்கும் கருவியாக இருந்து ஆட்சியை நடத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னையில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ பணக்கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே? பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர்ணித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் பிரதமராக இருந்தபோது தான் பல்வேறு துறைகளிலும் பெரும் ஊழல்கள் நடந்தன. நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் என…

Read More

நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

திரைக்கதை எழுத்தாளர் கனடா வாழ் பரம் ஜி ஞானேஸ்வரன் வலியுறுத்துகின்றார். கனடிய தமிழ் ஊடகத்துறையிலும் வீடு விற்பனைத்துறையிலும் பல ஆண்டுகள் காலமாக சேவை செய்து பலராலும் அறியப்பட்ட பரம் ஜி ஞானேஸ்வரன் அவர்கள் அண்மையில் மொன்றியால் நகரில் சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட “விடியலைத்தேடி” எனும் திரைக்கதை நூலின் ஆசிரியர் ஆவார். அப்புத்தகம் பற்றி அவருடன் நடைபெற்ற நேர்காணல். உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் : எழுத்தாளர் குரு அரவிந்தன் நேர்காணப்பட்டவர்: பரம் ஜி. ஞானேஸ்வரன் (நேர்காணும் படம் இணைக்கப்படவேண்டும்- OTO) விடியலைத்தேடி… கேள்வி: வணக்கம். திரு. ஞானேஸ்வரன் அவர்களே, பரம்.ஜி என்று பலருக்கும் அறிமுகமான நீங்கள் ‘ஒரு தமிழ் குடும்பத்தின் அகதி வாழ்க்கையை’…

Read More