‘இது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு’: சென்னை மழை குறித்து கமல் ட்வீட்

‘இது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு’: சென்னை மழை குறித்து கமல் ட்வீட்

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் மழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தனது கவலையைக் குறிப்பிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே ஒரு அறிக்கையையும் இணைத்துள்ளார். அதில், “சென்னையின் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர்வரத்து பாதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது….

Read More

உயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்

உயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மழைக்காக, வறட்சியை தீர்க்க தண்ணீர் வராதா என்று ஏங்கினோம். இன்று மழை வந்தாலும் இது போன்ற துயரங்கள் இரண்டு குழந்தைகளை இழந்து வாடும் மீளா துயரம் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று கூறுகிறார்களே? தண்ணீர் தேங்கவில்லை என்பது எல்லா இடங்களிலும் இல்லை, வேலை நடந்துள்ளது. அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கவில்லை என்பது மட்டுமே தீர்வாகாது. இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல்…

Read More

வீணாகும் மழைநீர்; பொதுமக்கள் தாமாக முன் வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

வீணாகும் மழைநீர்; பொதுமக்கள் தாமாக முன் வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளிலும், குடியிருப்புகளையொட்டிய பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை: ‘‘எங்கெங்கு காணினும் தண்ணீரடா… ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லையே’’ என்ற ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது சென்னை மாநகரம் தான். வட கிழக்குப் பருவமழையின் தொடக்க நாளிலேயே சென்னை மாநகரம் மிதக்கும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தாலும் அதை நாம் பயனுள்ள வகையில் சேமிக்கத் தவறுவது வருத்தமளிக்கிறது. சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 200 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக…

Read More