முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று காலை கூடிய ஆட்சிமன்றக்குழு மதுசூதனனை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக போட்டியிட்டவர் மதுசூதனன், ஈபிஎஸ் அணியில் தினகரன் போட்டியிட்டார். தேர்தல் ரத்து செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் அணிகள் இணைந்தாலும் உடனிருப்பவர்கள் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது அனைவரின் குறைபாடாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது…

Read More

மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் திடீரென்று கைகோர்த்துள்ளதால் மதுரை மாவட்ட அதிமுகவில் இதுவரை நீடித்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துவிட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர், மற்றொருவருக்கு முக்கியத்துவம் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் ஒற்றுமையாக இருப்பதுபோன்று அனைவரும் பங்கேற்பார்கள்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பதவியை இழப்பதற்கு ஒரு வகையில்…

Read More

நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் உயர் ரக காரை புதுச்சேரியில் பதிவு செய்து பதிவெண் வாங்கிய விவகாரம் குறித்து கேரள போலீஸார் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். புதுச்சேரியில் நடிகை அமலா பால் விலை உயர்ந்த தனது காரை பதிவு செய்த விவகாரத்தில் முறைகேடு செய்திருப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். ‘இந்த விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அமலாபால் கார் வாங்கியதில் அனைத்து ஆவணங்களும் புதுச்சேரி அரசிடம் சமர்பித்துள்ளார். துறைரீதியாக எந்த தவறும் நடைபெறவில்லை’ என புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த 6-ம் தேதி…

Read More

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. விளம்பரம் இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது. திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்….

Read More

அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்

அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்

அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவம்பர் 29, 2017, 05:46 PM திபெத் பீட பூமியில் உற்பத்தியாக இந்தியா வழியாக வங்கதேசத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் பிரமபுத்திராவின் முக்கிய கிளை நதி சியாங். சுமார் 230 கி.மீ நீளம் கொண்ட இந்த நதி, கிழக்கு சியாங் மாவட்டத்தில் பாசிகட் என்ற இடத்தில் பிரமபுத்திரா நதியில் இணைகிறது. அண்மையில், பிரம்மபுத்திரா நதியை சீனாவுக்குள் திருப்பும் வகையில் 1,000 கிலோமீட்டர் நீளத்துக்குச் சீனா சுரங்கம் வெட்டப்போவதாக செய்தி வெளியாகி, அதை சீனா மறுத்திருந்தது. இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக…

Read More

சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

ஐதராபாத்:”சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப்பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக, மோடி உள்ளார். அதுபோல, பெண்கள், தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள், இங்கு சாத்தியமே,” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்தார். இவாங்கா டிரம்ப், Ivanka Trump, நரேந்திர மோடி, Narendra Modi, பெண்கள் தொழில் முனைவோர், Women Entrepreneur,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், US President Donald Trumpஜி.டி.பி., GDP, மொத்த உள்நாட்டு உற்பத்தி, Gross Domestic Product, பெண் தொழிலதிபர்கள், Female Businessmen, ஆஸ்திரேலியா ,Australia, ஹமிஷ் பின்லேசன், Hamish Pine Lasane, தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திர…

Read More

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர். அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார். இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட…

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அவரிடம் வினவினர் அதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கமாட்டோம். ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடு விதித்தால், பணப்பட்டுவாடா செய்பவர்களே அந்தக் கட்டுப்பாட்டை விமர்சிப்பார்கள்” என்று கூறினார். வழக்கமான பரிசோதனை.. விஜயகாந்த் சிகிச்சை குறித்து சில…

Read More

ஜெ. நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஜெ. நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுக்கு டிசம்பர் 5-ல் நினைவு தினம் அனுசரிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5-ம் தேதி காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு ரூ.15 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். வரும் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின்…

Read More

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிவரும் இராகாலயம் இசைக் கல்லூரியின் 16வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பல மாணவ மாணவிகளின் இனிதான இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் அங்கு கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கல்லூரியின் அதிபரையும் வாழ்த்திச் சென்றனர். இங்கே காணப்படும் படத்தில் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தகப் பிரமுகர் திரு சுதர்சன் மற்றும் அவரது பார்pயார் திருமதி திவா சுதர்சன் ஆகியோர் மேடையில் கல்லூரி அதிபர் திரு ரவீந்திரன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கனடா…

Read More
1 2 3 9