ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி

ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் நீலத்திமிங்கல் விளையாட்டு விளையாடிய ஜெகதீஸ்வரன் (வயது 18) பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற ஜெகதீஸ்வரன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த விளையாட்டு பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருந்தன. தற்போது சிவகாசியில் இளைஞர் ஜெகதீஷ் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்

‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், ‘பரோலில்’ வந்தார். சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை. அவரது பரோல் விடுமுறை,…

Read More

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

ஆமதாபாத் : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அக்டோபர் 9 முதல் 11 வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார், ராகுல். சோட்டா உதய்பூரில் இளைஞர்கள் இடையே பிரசாரம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார். கழிவறைக்கு வெளியே குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்து, அதை கவனிக்காமல் ராகுல் சென்றுள்ளார். அவருடன் வந்த எஸ்பிஜி கமாண்டோக்கள்,…

Read More